கேரளாவை மிரட்டும் ஜிகா வைரஸ்... மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி...

by Admin / 21-07-2021 03:46:05pm
கேரளாவை மிரட்டும் ஜிகா வைரஸ்... மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி...

 
கேரளாவில் சமீப நாட்களாக ஜிகா வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது.  கேரளாவில் இதுவரை 37- பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.  இந்த நிலையில், நேற்று மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம், ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து உள்ளதுபுதிதாக ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டவரின் உடல் நிலை திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.தற்போது ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும், ஜிகா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமாகி, 30 பேர் வீடு திரும்பி விட்டதாகவும் கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.

 

Tags :

Share via