by Editor /
07-07-2023
08:51:11am
கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோவை சரக டி.ஐ.ஜி-யாக கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு பணிபுரிந்து வந்தார்.
உயர் காவல்துறை அதிகாரி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது, தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
Tags :
Share via