குற்றால அருவியில் தடுப்புகள் அகற்றப்பட்டதால் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்.

by Editor / 03-06-2025 10:32:42am
குற்றால அருவியில் தடுப்புகள் அகற்றப்பட்டதால் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஒரு வார காலமாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனைத்து அருவிகளிலும் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்ததைத் தொடர்ந்தும்  அருவிகளில் நீர்வரத்து குறைய தொடங்கியதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் கடந்து ஞாயிற்றுக்கிழமை முதல் அனுமதி அளித்தது இதன் தொடர்ச்சியாக  குற்றாலம் பிரதான அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து சீராக இருந்து வருவதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு திரண்டு வந்து குளித்து சென்ற வாரம் உள்ளனர் இன்று காலை முதல் குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் பாதுகாப்பு வளையத்தின் இரு புறங்களிலும் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக தடுப்பு பகுதி வரை சென்று குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

 

Tags : குற்றால அருவியில் தடுப்புகள் அகற்றப்பட்டதால் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்.

Share via

More stories