கிரானைட் முறைகேடு வழக்கு.. காணொளி மூலமும் ஆஜராகாத சகாயம்

மதுரை மேலூரில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது சம்பந்தமான வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. இந்த வழக்கை விசாரித்து அறிக்கை அளித்த மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம், பாதுகாப்பை காரணம் காட்டி நீதிமன்றத்தில் ஆஜராக மறுத்தார். இன்று காணொளி காட்சி மூலம் அவர் ஆஜராவார் என கூறப்பட்ட நிலையில் அதிலும் சகாயம் ஆஜராகவில்லை. தனது நிலைபாடு குறித்து நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக அவர் கூறினார்.
Tags :