கோவிலை இடித்து உள்ளே புகுந்த காட்டு யானை

by Staff / 04-11-2022 01:14:47pm
கோவிலை இடித்து உள்ளே புகுந்த காட்டு யானை

கோவை மாவட்டம் வால்பாறை அக்கா மலை எஸ்டேட் 21 ஆம் நம்பர் குடியிருப்பு பகுதியில் அதிகாலை 3.30 மணியளவில் மூன்று காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளன.அங்குள்ள மாரியம்மன் கோவிலை இடித்து கருவறையில் உள்ள பொருட்களை உடைத்து சூரையாடிச் சென்றன. இதனால் அப்பகுதியில் மக்கள் இரவில் அச்சத்துடன் இருந்துள்ளனர்.தொடர்ந்து அப்பகுதியில் யானைகள் அட்டகாசம் செய்வதோடு, மாலை நேரங்களில் நடமாட முடியாத சூழல் உள்ளது. மூன்று யானைகளையும் வனத்துறையினர் அடர்ந்த காட்டுக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
 

 

Tags :

Share via

More stories

Logo