நெல்லையில் நடந்த கொலை பழிக்கு பழியாக நடந்ததாக தகவல்.

by Editor / 20-12-2024 11:26:24pm
நெல்லையில் நடந்த கொலை பழிக்கு பழியாக நடந்ததாக தகவல்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நீதிமன்ற வளாகம் முன்பு மாயாண்டி என்பவர் இன்று (டிச.20) காலை வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், தற்போது 7ஆவது குற்றவாளியையும் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு கீழநத்தம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக இருந்த ராஜாமணி என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக மாயாண்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags : நெல்லையில் நடந்த கொலை பழிக்கு பழியாக நடந்ததாக தகவல்.

Share via