திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆக. 8 வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை

by Admin / 03-08-2021 02:53:35pm
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆக. 8 வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை



திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் நோய் தொற்று சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும், தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படியும், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஏற்கனவே ஆகஸ்ட் 1, 2, 3 மற்றும் ஆடி அமாவாசை (ஆக. 8) ஆகிய விசேஷ நாள்களில் அதிகளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் கரோனா நோய்தொற்று பரவாமல் இருக்க திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வருகின்ற 8-ம் தேதி வரை இத்திருக்கோயில் மற்றும் குலசேகரன் பட்டினம், முத்தாரம்மன் கோயில் மற்றும் கோவில்பட்டி, பூவனநாத சுவாமி திருக்கோயிலிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது எனவும், மேற்படி நாள்களில் திருக்கோயில்களில் ஆகம விதிப்படி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via