நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

by Staff / 10-08-2023 02:38:13pm
நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான 3-வது நாள் விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தாமதமாவதற்கு தமிழ்நாடு அரசே காரணம் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இதையடுத்து மதுரை எய்ம்ஸ் தாமதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். மேலும், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு இன்று பிரதமர் மோடி பதிலளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via