சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வசதியாக சென்னையில் இருந்து மட்டும் 11,323 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் சிரமம் இன்றி வாக்களிக்க போக்குவரத்து துறை பல்வேறு சிறப்பு வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது. சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வசதியாக சென்னையில் இருந்து மட்டும் 11,323 பேருந்துகள் இயக்கப்படுகின்றன .ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 23 வரை இந்த பேருந்துகள் இயக்கப்படும் வழக்கமாக இயக்கப்படுகின்ற 2092 பேருந்துகளுடன் கூடுதலாக 6234 சிறப்பு பேருந்துகள் இந்த மூன்று நாட்களுக்கு இயக்கப்பட உள்ளன .கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் மற்றும் கே.கே. நகர் ஆகிய நான்கு முக்கிய இடங்களில் பேருந்துகள் புறப்படும். பயணிகள் தங்களது பயண சீட்டுகளை இணையதளம் வழியாக அல்லது மொபைல் செயலி மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்களிக்கும் வியாழக்கிழமை அன்று சென்னையில் மாநகரப் பேருந்துகளில் முதியவர்கள் இலவசமாக பயணிக்கலாம். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தகுந்த வயது சான்று மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து சாதாரண கட்டண பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வை திறன் அற்றவர்களும் தங்கள் அடையாள அட்டையை காண்பித்து இந்த இலவச பயண வசதியை பெற்றுக் கொள்ளலாம். இந்த வசதி காலை 6.oo மணி முதல் இரவு 7.00 மணி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :


















