கரூர், திருவாரூர் ஆசிரியர்களுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்ப விருது

by Editor / 02-07-2021 09:28:21am
கரூர், திருவாரூர் ஆசிரியர்களுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்ப விருது

தகவல் தொழில்நுட்பத்தில் படைப்பாற்றலைக் கொண்டு, சிறப்பாக கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் ஐசிடி விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2018-ம் ஆண்டுக்கான விருதுக்கு தமிழகத்திலிருந்து கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சு.மனோகர்(44), திருவாரூர் மாவட்டம் கிளரியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் எஸ்.கணேஷ் ஆகியோர் உட்பட 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விருது குறித்து வெள்ளியணை பள்ளி இடைநிலை ஆசிரியர் சு.மனோகர் கூறியது:

மாணவர்களைப் பற்றிய தகவல்கள், வீட்டுப் பாடங்களை அறிந்துகொள்ள க்யூஆர் கோடு முறை அறிமுகம் செய்தது, சிறிய எளிய செல்போன் செயலிகளை உருவாக்கி, அனிமேஷன் வீடியோக்கள் வழியாக மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி கற்கும் வகையில் கணினி மூலம் புதுமையான முயற்சிகளை மேற்கொண்டது போன்றவற்றுக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது என்றார். அவருக்கு, முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, பள்ளித் தலைமை ஆசிரியர் தர்மலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo