சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்தப்படும்- அமைச்சர் தங்கம் தென்னரசு முடிவு 

by Editor / 09-06-2021 04:32:45pm
சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்தப்படும்- அமைச்சர் தங்கம் தென்னரசு முடிவு 




தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசுகையில், சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை போன்ற தென்மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வர திட்டம் உள்ளது.
மதுரையை மையமாக கொண்டு தொழில் சார்ந்த வல்லுநர்கள், நிறுவனங்களை உள்ளடக்கிய Forum அமைத்து, தொழில் சாத்தியக் கூறுகள் தொடர்பாக தொடர்ந்து விவாதித்து தொழிற்கொள்கை உருவாக்கவும் திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், சென்னையில் அதிக முதலீட்டில் தொழில் துவங்க அளிக்கப்படும் சலுகைகள், தென் மாவட்டங்களில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கும் வழங்கப்படவுள்ளது 
கடந்த இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜூலை 15 ஆம் தேதிக்கு பிறகு புதிய தொழில் முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்படும் தொல்லியல் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லூர், கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட இடங்களில் நேரில் ஆய்வு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

Tags :

Share via
Logo