மகளிர் உரிமை தொகை பணிகளில் அதிகாரிகள் அலட்சியம் சுட்டிகாட்டிவெளுத்துக்கட்டிய டி.ஆர்.ஓ

தென்காசி மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை பணிகளில் அதிகாரிகள் அலட்சியத்தை சுட்டிகாட்டி வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகளை மாவட்ட வருவாய் அலுவலர் கடுமையாக சாடியது பரபரப்பை ஏற்படுத்தியது
குடும்பத்தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் 15-ம் தேதியில் இருந்து செயல்படுத்தப்பட உள்ளது. உரிமைதொகைக்காக விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் உண்மை தன்மை குறித்து இதற்காக நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் சரிபார்த்து வருகின்றனர். இதையடுத்து தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளின் முதல் பட்டியல் இந்த மாத இறுதிக்குள் தயாரிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகைக்காக 3,71,309 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர் இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் அனைத்து வட்டார பகுதிகளில் இருந்தும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் மகளிர் உரிமை தொகையில் கடையநல்லூருக்கு உட்பட்ட பகுதியில் முறையான அதற்கான விண்ணப்பங்கள் இதுவரை சரிபார்க்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி கடையநல்லூர் பகுதியில் முறையாக விண்ணப்பங்கள் ஆவணம் செய்யப்படவில்லை இவ்வாறு இருக்கையில் அங்கு எதற்காக தாசில்தார் உள்ளார் என கடுமையாக பேசினார். இதனை தொடர்ந்து துறை சார்ந்த அதிகாரியை அழைத்து தங்களிடம் குழுவில் கதறினாலும் வேலை நடைபெறவில்லை என மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் அதிகாரிகளை கடுமையாக சாடியது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags : மகளிர் உரிமை தொகை பணிகளில் அதிகாரிகள் அலட்சியம் சுட்டிகாட்டிவெளுத்துக்கட்டிய டி.ஆர்.ஓ