தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழக ஆளுநருடன் சந்திப்பு.

by Editor / 10-01-2025 07:32:44pm
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழக ஆளுநருடன் சந்திப்பு.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர்  பிரேமலதா விஜயகாந்த்  இன்று (10.01.2025) தமிழக ஆளுநர் அவர்களை மாலை 4 மணிக்கு, தலைமை கழக நிர்வாகிகள், சென்னை மாவட்ட கழக செயலாளர்களுடன், சந்தித்து தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், கஞ்சா மற்றும் போதை கலாச்சாராத்தை ஒழிக்க வேண்டும், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், மதுரை மேலூர் டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்கிற மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஆளுநரிடம் மனு அளித்தார்கள்.
 

 

Tags : தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழக ஆளுநருடன் சந்திப்பு.

Share via