நடிகை அக்சரா ரெட்டியிடம் அமலாக்கத்துறை விசாரணை

by Admin / 04-02-2022 11:45:44am
நடிகை அக்சரா ரெட்டியிடம் அமலாக்கத்துறை விசாரணை

கொச்சி நெடும்பாசேரி விமான நிலையத்தில் 2013-ம் ஆண்டு 20 கிலோ தங்கம் கடத்தியது தொடர்பாக வடகரையை சேர்ந்த பாயிஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். 

இந்த கடத்தல் தொடர்பாக பாயிசுக்கு நெருக்கமானவர்களிடம் அமலாக்கப் பிரிவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
பிரபல தமிழ், கன்னட நடிகை அக்சரா ரெட்டி நேற்று காலையில் கோழிக்கோடு அமலாக்க இயக்குனரகத்திற்கு விசாரணைக்காக வரவழைக்கப்பட்டார். 

அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கம் கடத்தலில் பாயிசுடனான தொடர்பு குறித்து விசாரணை நடத்தினர். ஆனால் விசாரணை விவரங்களை அதிகாரிகள் வெளியிட மறுத்து விட்டனர்.

 

Tags :

Share via