மசோதாக்கள் நிறைவேற்றம்: ஓபிஎஸ் ஆதரவு

சட்டப்பேரவையில் முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு குரல் வாக்கெடுப்பு மூலம் ஆதரவு கொடுத்துள்ளோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநரும், முதலமைச்சரும் இணக்கமாக செயல்பட வேண்டும். மீன்வள பல்கலைக்கழக பெயர் மாற்ற மசோதாவிற்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பி இருக்கிறார். அந்த புரிதல் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்து இருக்கிறார்கள் என ஓபிஎஸ் கூறினார்.
Tags :