36 மணி நேர ஊரடங்கு அத்தியாவசியப் பொருட்களை வாங்க சந்தைகளுக்கு திரண்ட மக்கள்

இலங்கையில் 36 மணி நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருள்களை வாங்க மக்கள் சந்தைகளில் திரண்டனர்.
அன்னிய செலவாணி வீழ்ச்சி பணவீக்கம் எரிபொருள் உணவு தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் அங்கு அத்தியாவசிய பொருள்கள் விண்ணை எட்டும் அளவுக்கு விலை உயர்ந்தது.
அத கண்டித்து அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து நாடு தழுவிய அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
தற்போது 36 மணி நேரம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் திரண்டனர் கடும் விலை உயர்வால் தேவையான பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் திணறினர்.
எரிபொருள் வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
Tags :