கொங்கு மண்டலத்தில் திமுவுக்கு பலம் சேர்த்த செந்தில் பாலாஜி
அதிமுகவின் கோட்டையாக கருத்தப்படும் கொங்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் திமுக பாராளுமன்றத்தேர்தலை கருத்தில் கொண்டு காயை நகர்த்த தொடங்கியுள்ளது.அதன் முன்னோட்டமாக இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் திமுக சார்பில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்றார்.
இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக, அமமுக, பா.ஜ.க உட்பட பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த 55,000 பேர் திமுகவில் இணைந்தனர். இதில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, 'திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியை வரவேற்கிறேன் திமுகவில் இணைந்து கொண்ட முன்னாள் பாஜக உறுப்பினர் மைதிலி வினோவை வரவேற்கிறேன் திமுகவில் இணைந்த முன்னாள் தேமுதிக எம்எல்ஏ தினகரனுக்கு நன்றி. உங்களின் வரவு திமுகவிற்கு பலம் சேர்க்கும்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதியில் 39லும் வெற்றிபெறுவோம். இங்கு உள்ள 55 ஆயிரம் பேரும் தலைக்கு தலா 10 வாக்குகளை நம் பக்கம் கொண்டு வர வேண்டும். இதை டார்கெட்டாக வைத்து செயல்பட வேண்டும்' என்று பேசினார். இந்த பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது அமைச்சர் செந்தில் பாலாஜிதான். பிற கட்சிகளில் இருந்து தொண்டர்களை யார் வேண்டுமானாலும் இழுத்து வரலாம்.
ஆனால் 55,000 நபர்களை இழுத்து, திமுகவிற்குள் சேர்த்து தன்னுடைய மாஸ் இமேஜை மீண்டும் நிரூபித்து உள்ளார். அதிலும் அதிமுக, பாஜக,தேமுதிகவை சேர்ந்த முக்கிய நபர்களை இழுத்து வந்து திமுக தலைமைக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் அதிமுக முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக திகழ்ந்த ஆறுகுட்டி, மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருக்கிறார்.
இவர், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து இருமுறை வென்று சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். மேலும் அவரைத் தொடர்ந்து தேமுதிகவைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் தினகரனும் திமுகவில் இணைந்தார். அதிமுகவின் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினராக பணியாற்றிய அபிநயா, பாஜகவின் மாநில மகளிர் அணி செயலாளர் மைதிலி ஆகியோரும் சேர்ந்து உள்ளனர்.அதிரடியாக இந்த மாபெரும் கூவத்தின் வாயிலாக அதிமுக,தேமுதிக,பாஜக என 3கட்சிகளில் இருந்தும் முக்கிய புள்ளிகளை திமுகவின் பக்கம் இழுத்து கொங்கு மண்டலத்தில் திமுவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பலம் சேர்த்துள்ளார் என்பதும்,எதிரணிகளுக்கு அதிர்ச்சியையும் கொடுத்துள்ளதாவே திமுகவினர் கூறுகின்றனர்.
Tags : மாபெரும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்றார்.