முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

முன்னாள் மின்சாரத்துறை அமைச்சா் செந்தில் பாலாஜி ஜாமீன் கோாிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று [செப்- 26] ஜாமின் வழங்கியதோடு அவர் அமைச்சராவதற்கு எந்த விதமான தடையும் இல்லை என்று தீர்ப்பளித்தது.
கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது ,சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு இன்று வெளியாகி உள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி அமலாக்க துறையால் அவர் கைது செய்யப்பட்டு இருந்தார். செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரவை மாற்றத்தின் பொழுது அமைச்சராக வாய்ப்புள்ளதாக தகவல்.
Tags :