திமுகவுக்கு கூட்டாக ஆதரவு தெரிவித்த 16 விவசாய சங்கங்கள்

by Staff / 23-03-2024 03:41:35pm
திமுகவுக்கு கூட்டாக ஆதரவு தெரிவித்த 16 விவசாய சங்கங்கள்

தமிழ்நாட்டில் இயங்கி வரும் 16 விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து திமுக கூட்டணிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. தஞ்சாவூரில் தங்கியிருந்த முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று காலை சந்தித்து தங்கள் ஆதரவை விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர். காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம், இந்திய விவசாயிகள் சங்கம், ஐக்கிய விவசாயிகள் சங்கம், சிபா கரும்பு விவசாயிகள் சங்கம், தற்சார்பு விவசாயிகள் சங்கம், உழவர் மன்ற கூட்டமைப்பு, நஞ்சை புஞ்சை விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு நல சங்கம் உட்பட மொத்தம் 16 சங்கங்கள் திமுகவுக்கு தங்களது ஆதரவு தெரிவித்துள்ளன.

 

Tags :

Share via

More stories