ஆப்கானிஸ்தானில் அடுத்த 36 மணிநேரத்தில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்?
ஆப்கானிஸ்தானில் அடுத்த 36 மணி நேரத்திற்குள் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது முதல் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. அங்கிருந்து வெளியேறும் மக்களை குறிவைத்து கடந்த வியாழக்கிழமை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கிழக்கு ஆப்கான் நோக்கி அமெரிக்க டிரோன் கொண்டு தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், ஆப்கானிஸ்தானில் நிலைமை மோசமாகி வருவதாக தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனக்கு கிடைத்த தகவல்படி அடுத்த 24 அல்லது 36 மணி நேரத்திற்குள் காபூல் விமான நிலையத்தில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரித்துள்ளார்.
எனவே மக்கள் விமான நிலையத்தில் எந்தவொரு நுழைவாயிலிலும், பஞ்ஷ்ஷீர் அருகிலுள்ள வாயிலும் நிற்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags :