வெளிநாட்டில் சிக்கி உயிருக்கு போராடும் என் மகளை காப்பாற்ற மத்திய அரசுக்கு கண்ணீருடன் கோரிக்கை விடுத்த தாய்

by Editor / 21-06-2022 01:01:10pm
வெளிநாட்டில் சிக்கி உயிருக்கு போராடும் என் மகளை காப்பாற்ற மத்திய அரசுக்கு கண்ணீருடன் கோரிக்கை விடுத்த தாய்

 விருதுநகர் மாவட்டம் சிவகாசியை  சேர்ந்த பெண் ஒருவர் உடல்நிலை பாதிக்கப் பட்டுள்ள தனது மகளை இந்தியாவிற்கு கொண்டு வர பயணச்சீட்டு ஏற்பாடு செய்து தரவேண்டும் என மத்திய அரசுக்கு கண்ணீருடன் கோரிக்கை விடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. திருத்தங்கள் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் சாந்தலட்சுமி தம்பதியினருக்கு திவ்யா சொர்ணமால்யா என்ற மகள் உள்ளார் மருத்துவப் படிப்பு படிக்க வேண்டும் என்ற கனவில் இருந்த திவ்யா கடந்த ஓராண்டுக்கு முன்பு உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு சென்று படித்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது குடும்பத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்த மாணவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.  அவரை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்ப தாயார் கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த மாணவி எழுந்து நடமாட முடியாத நிலையில் உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து பல கட்ட முயற்சிகளுக்குப் பின்னர் தாயார் அங்கு சென்று மகளை பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

 

Tags :

Share via
Logo