அறிந்துகொள்வோம் ஆன்மீகத்தை

by Editor / 19-09-2022 09:09:15pm
அறிந்துகொள்வோம் ஆன்மீகத்தை

கற்க வேண்டிய நான்கு வகை உயிரினங்கள் !

1. சுவேதஜம் - புழுக்கத்திலிருந்து பிறக்கக்கூடியன - புழு ! பூச்சி ! கொசு போன்றவை !!

2. உத்பிஜம் - பூமியைப் பிளந்து கொண்டு வெளிவருவன - மரம் ! செடி ! கொடி போன்றவை !!

3. அண்டஜம் - முட்டையிலிருந்து வெளிவருவன - பறவைகள் ! சில நீர்வாழ்வன போன்றவை !!

4. ஜராயுதம் - கருப்பையிலிருந்து வெளிவருவன - மனிதன் ! சில விலங்குகள் போன்றவை !!

 

ஆதித்தனுடைய ஏழு புத்திரர்கள் :

1. கர்ணன் ! 2. காளந்தி ! 3. சுக்ரீவன் ! 4. தத்தியமகன் ! 5. சனி ! 6. நாதன் ! 7. மனு !!

பெண்களுக்குரிய ஏழு பருவங்கள் :

1. பேதை - 1 முதல் 8 வயது வரை

2. பெதும்பை - 9 முதல் 10 வயது வரை

3. மங்கை - 11 முதல் 14 வயது வரை

4. மடந்தை - 15 முதல் 18 வயது வரை

5. அரிவை - 19 முதல் 24 வயது வரை

6. தெரிவை - 25 முதல் 29 வயது வரை

7. பேரிளம் பெண் - 30 வயது முதல்

ஆண்களுக்குரிய ஏழு பருவங்கள் :

[ பெண்களின் வயது எல்லையும் ! ஆண்களின் வயது எல்லையும் ! ஒன்று தான் என்பதைக் கவனத்திற் கொள்க ]

1. பலன் ! 2. மீளி ! 3. மறவோன் ! 4. திறவோன் ! 5. காளை ! 6. விடலை ! 7. முதுமகன் !!

நந்தியின் அருள் பெற்ற எட்டுப்பேர் :

1. சனகர் ! 2. சனாதனர் ! 3. சனந்தகர் ! 4. சனத்குமாரர் ! 5. வியாக்கிரபாதர் ! 6. பதஞ்சலி ! 7. சிவயோக முனிவர் ! 8. திருமூலர் !!

அஷ்ட பர்வதங்கள் :

1. கயிலை ! 2. இமயம் ! 3. ஏமகூடம் ! 4. கந்தமாதனம் ! 5. நீலகிரி ! 6. நிமிடதம் ! 7. மந்தரம் ! 8. விந்தியமலை !!

ஆத்ம குணங்கள் :

1. கருணை ! 2. பொறுமை ! 3. பேராசையின்மை  ! 4.பொறாமையின்மை ! 5. நல்லனவற்றில் பற்று [உறுதி] ! 6. உலோபத்தன்மையின்மை ! 7. மனமகிழ்வு ! 8. தூய்மை !!

எண்வகை மங்கலங்கள் :

1. கண்ணாடி ! 2. கொடி ! 3. சாமரம் ! 4. நிறைகுடம் ! 5. விளக்கு ! 6. முரசு ! 7. ராஜசின்னம் ! 8. இணைக்கயல் !!

எண்வகை (எட்டு வகை) வாசனைப் பொருட்கள்:

1.சந்தனம் ! 2. கோட்டம் ! 3. கஸ்தூரி ! 4. கற்பூரம் ! 5. குங்குமம் ! 6. பச்சிலை ! 7. அகில் ! 8. விளாமிச்சை வேர் !!

ஏழுவகைப் பிறப்புக்கள் :

1.தேவர் ! 2. மனிதர் ! 3. விலங்குகள் ! 4. பறப்பவை ! 5. ஊர்பவை  ! 6. நீர்வாழ்பவை ! 7. தாவரம் !!

ஈரேழு உலகங்கள் :

முதலில் மேல் உலகங்கள்:

1. பூமி ! 2. புவர்லோகம் ! 3. தபோலோகம் ! 4 . சத்யலோகம் ! 5. ஜனோலோகம் ! 6. மஹர்லோகம் ! 7. சுவர்க்கலோகம் !!

அடுத்து கீழ் உலகங்கள் :

1. அதலம் ! 2. கிதலம் ! 3. சுதலம் ! 4. இரசாதலம் ! 5. தவாதலம் !                    6. மகாதலம் ! 7. பாதாலம் !!

குபேரனிடம் இருக்கும் நவநிதிகள் :

1. சங்கநிதி ! 2. பதுமநிதி  ! 3. கற்பநிதி ! 4. கச்சபநிதி ! 5. நந்தநிதி ! 6. நீலநிதி ! 7. மஹாநிதி ! 8. மஹாபதுமநிதி ! 9. முகுந்த நிதி !!

அஷ்ட ஐஸ்வர்யங்கள் :

1. தனம் ! 2. தான்யம் ! 3. பசு ! 4. அரசு ! 5. புத்திரர் ! 6. தைரியம் ! 7. வாகனம் ! 8. சுற்றம் !!

எண்வகை போகங்கள் :

1. அணிகலன் ! 2. தாம்பூலம் ! 3. ஆடை ! 4. பெண் ! 5. பரிமளம் ! 6. சங்கீதம் ! 7. பூப்படுக்கை ! 8. போஜனம் (உணவு) !!

நவ நாகங்கள் :

1. ஆதிசேஷன் ! 2. கார்க்கோடகன் ! 3.அனந்தன் ! 4. குளிகன் ! 5. தஷன் ! 6. சங்கபாலன் ! 7. பதுமன் ! 8. மகாபதுமன் ! 9. வாசுகி !!

நன்மை தரக்கூடிய தச தானங்கள் :

1. நெல் ; 2. எள் ! 3. உப்பு ! 4. தீபம் !               5. மணி! 6. வெள்ளி ! 7. வஸ்திரம் ! 8.சந்தனக்கட்டை ! 9. தங்கம் ! 10. நீர்ப்பாத்திரம் !!

நாம் அறிந்த  கருத்துக்களை ஒவ்வொருவருக்கும் கற்பிக்க வேண்டும் ! நாம் கற்றதின் படி (தர்மத்தை) கடைபிடிக்க வேண்டும் !!

 

Tags :

Share via