வால்பாறை நகராட்சி ரகசிய வாக்கெடுப்பில் வெல்லப் போவது யார்...? 

by Staff / 07-08-2025 08:50:13pm
வால்பாறை நகராட்சி ரகசிய வாக்கெடுப்பில் வெல்லப் போவது யார்...? 

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் திமுக  நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி ஆளும் கட்சி  திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் 13 பேர்களும் அதிமுக நகர் மன்ற உறுப்பினர் ஒருவரும் இணைந்து மொத்தம் 14 பேர்கள் நகர்மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்ய நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி போர்க்கொடி தூக்கிய நிலையில் தொடர்ந்து மூன்று முறை நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்து கலந்து கொள்ளாமலும் சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையாளர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியரிடமும்  அதற்கான மனுவையும் அளித்தனர் இந்நிலையில் அம்மனுவின் மீதான நடவடிக்கையாக கடந்த  23 ஆம் தேதியன்று நாளை 7 ஆம் தேதி காலை 11 மணிக்கு  தீர்மானம் பற்றிய சிறப்பு கூட்டம் மூலம் விவாதமும் அதனைத் தொடர்ந்து ரகசிய வாக்கெடுப்பும் நடைபெற உள்ளதாக நகராட்சி ஆணையாளர் கையொப்பமிட்ட நோட்டீஸ் நகராட்சி அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு 21 வார்டு நகர் மன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கியுள்ளனர் எனவே நாளை நடைபெறவுள்ள ரகசிய வாக்கெடுப்பில் வெல்லப்போவது யார்...? என்றும் கிடப்பில் போடப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் நடக்குமா... என்றும் பொதுமக்கள் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர் எனவே விடிந்தால் தீர்வு கிடைக்குமா ... 
 

 

Tags :

Share via

More stories