இஸ்லாமியர்கள் இந்தியாவில் பாதுகாப்பாக இருப்பதின் காரணமாகத்தான்....

by Admin / 11-04-2023 08:18:01pm
இஸ்லாமியர்கள் இந்தியாவில் பாதுகாப்பாக இருப்பதின் காரணமாகத்தான்....

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதனம் அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளாா். அமெரிக்காவில் இந்தியாவைப் பற்றிய எதிர்மறையாக மேற்கிந்திய நாடுகளில் பிரச்சாரங்கள் செய்யப்படுவதாகத்தொிவித்தாா்..  இந்திய மக்கள் கொரோனா பேரிடருக்கு பின்பு தங்களுடைய தொழில்களில் ஏற்பட்ட இழப்புகளில் இருந்து வலிமையாக மீண்டதை அவர் சுட்டிக் காட்டியதோடு இந்தியாவைப் பற்றி தவறான செய்தியை பரப்புவோா் என்ன நடக்கிறது என்பது இந்தியாவிற்குள் வந்து பார்த்து புரிந்து கொள்ளுமாறு அவர் மேற்குத்திய நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார் .உலக வர்த்தக அமைப்பு மேலும் வளர்ச்சி பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அனைத்து நாடுகளின் கோரிக்கைகளையும் செவிமடுக்க வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியதோடு எதிர்மறையான கருத்துக்களை கேட்கக்கூடாது என்றும்கூறினாா். 
 

அமெரிக்கா வாசிங்டனில் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் பங்கேற்ற இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திபற்றிய கேள்விக்கு மேற்குத்திய  நாட்டு ஊடகங்கள் எந்தகளஆய்வும்  செய்யாமல் செய்தி வெளியிடுவதாக குற்றம் சாட்டிய நிர்மலா சீதாராமன், இஸ்லாமியர்கள் இந்தியாவில் எந்த விதமான இன்னல்களும் இன்றி மிக சாதாரணமாக தங்களுடைய வாழ்க்கையை பிரச்சனைகள் இன்றி பல்வேறு சலுகைகளை பெற்று வாழ்ந்து வருவதாக தெரிவித்தார். பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மதச் சிறுபான்மையினர் பிரச்சனைக்கு உள்ளாக்கப்படுகின்ற பொழுது இந்தியாவில் அது போன்ற எந்த விதமான நிலையுமில்லை என்பதை தெளிவுபடுத்தினார் .இஸ்லாமியர்கள் இந்தியாவில் பாதுகாப்பாக இருப்பதின் காரணமாகத்தான் இந்திய இஸ்லாமியர்கள் மக்கள் தொகையில் எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறார்கள் என்றும் தெரிவித்தாா்.

இஸ்லாமியர்கள் இந்தியாவில் பாதுகாப்பாக இருப்பதின் காரணமாகத்தான்....
 

Tags :

Share via