38 -அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

by Admin / 11-04-2023 09:02:48pm
 38 -அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இன்று தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சிறப்பு திட்ட செயலாக்க துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. விவாதத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் ,பாரா ஸ்போர்ட்ஸ் மைதானம், தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை ,நான் முதல்வன் வேலை வாய்ப்பு மையம் உள்ளிட்ட 38 அறிவிப்புகளை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். மானிய கோரிக்கைக்கு முன்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினையும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவையும் சந்தித்து வாழ்த்து பெற்றார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

 

Tags :

Share via