அதிர்ச்சியூட்டும் ஆபரண தங்கத்தின் விலை- இன்று சவரனுக்கு 640 உயர்வு.
அதிர்ச்சியூட்டும் ஆபரண தங்கத்தின் விலை.
-சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 640 உயர்வு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 80 ரூபாய் அதிகரித்து 6,805 ரூபாய்க்கும் ஒரு சவரன் 54 ஆயிரத்து நானூத்தி நாப்பது ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 7,275 ரூபாய்க்கு 24 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் 58,200 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் 50 காசு உயர்ந்து 90 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
. கடந்த பத்து நாட்களுக்கு மேலாக தங்கத்தின் விலை 6,500 ரூபாய்க்கு மேலாக விற்பனையாகி.... இப்பொழுது 6,805 ரூபாய்க்கு விற்பனையாகுவது பொது மக்களிடையே பெருத்த கவலையை உருவாக்கியுள்ளது.
Tags :


















