முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்.பி.கள் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

மக்களவைத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அனைத்துக் கட்சி எம்.பி.க்களை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மக்களவைத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அனைத்துக் கட்சி எம்.பி.க்களை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்று திமுக எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளை தொடங்கும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. மும்மொழிக்கொள்கை, நிதிப்பகிர்வு, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகளை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவது என்று திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. தொகுதி மறு சீரமைப்பினால் தொகுதிகளை இழக்கும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மேற்குவங்கம், ஒடிசா உள்ளிட்ட 7 மாநிலங்களையும் ஒருங்கிணைத்து களம் காண்போம் என்பன உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்.பி.கள் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்