மீனவ கிராம நிர்வாகிகள் மிரட்டல்; கண்டித்து ஆன்டன் கோமஸ் போராட்டம்

by Staff / 18-12-2022 03:26:10pm
மீனவ கிராம நிர்வாகிகள் மிரட்டல்; கண்டித்து ஆன்டன் கோமஸ் போராட்டம்

தூத்துக்குடி மீனவ கிராமங்களில் செயல்பட்டு வரும் ஊர் கமிட்டியை சீர்குழைக்கும் வகையில் ஆளுங்கட்சியனர் தூண்டுதலின் பேரில் ஊர் கமிட்டியை சேர்ந்த நிர்வாகிகள் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போட்டு வருவதாகவும் இதை எதிர்த்து சென்னையில் அகில இந்திய மீனவர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த உள்ளதாக அகில இந்திய மீனவர் சங்கத் தலைவர் ஆன்டன் கோமஸ் எச்சரிக்கைதமிழக முழுவதும் மீனவ கிராமங்களில் ஊர் கமிட்டிகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் மீனவ கிராமங்களில் நடைபெறும் பிரச்சனைகளுக்கும் மற்றும் கடலில் மீனவர்களிடையே ஏற்படும் மோதல் ஆகியவற்றிற்கு தீர்வு காணப்பட்டு அதன் மூலம் ஒற்றுமை ஏற்படுத்தப்பட்டு வருகிறது சுமார் 400 ஆண்டுகளாக இந்த ஊர் கமிட்டியினர் மீனவர் கிராமங்களில் மீனவ மக்களால் தேர்வு செய்யப்பட்டுநிர்வாகம் செய்து வருகின்றனர்இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய மீனவர் சங்க தலைவர் அண்டன் கோமஸ் கூறுகையில்தமிழக முழுவதும் ஆளுங்கட்சியினர் ஆளுங்கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் தங்களின் அரசியல் லாபத்துக்காக இந்த ஊர் கமிட்டியை சீர்குழைக்கும் வகையிலும் தங்களுக்கு எதிராக செயல்படும் ஊர் கமிட்டி நிர்வாகிகள் மீது காவல் காவல்துறையினரை வைத்து பொய் வழக்கு போட்டு வருகின்றனர் இதற்கு மீனவர்கள் சார்பாக தமிழக அரசுக்கு அகில இந்திய மீனவர் சங்கம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறதுஇந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க விட்டால் சென்னையில் அகில இந்திய மீனவர் சங்கம் சார்பில் மீனவர்களை திரட்டி விரைவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்
 

 

Tags :

Share via