மானியக் கடன் பெற்றுத் தருவதாக கூறி இரண்டு பெண்களிடம் 13 லட்சம் மோசடி பெண் மீது ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

by Editor / 19-07-2022 11:49:02am
மானியக் கடன் பெற்றுத் தருவதாக கூறி இரண்டு பெண்களிடம் 13 லட்சம் மோசடி பெண் மீது ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

 தேனி மாவட்டத்தில் அரசு மானியம் கடன் பெற்றுத் தருவதாக கூறி இரண்டு பெண்களிடம் நூதன முறையில் 13 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் மீது ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு ஸ்ரீ ஹனுமான் ஏஜென்சி நிறுவனம் செயல்பட்டு  வந்துள்ளது. இந்த நிறுவனம் சார்பில் தேனி போடி கோட்டூர் சீலையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வந்த வீட்டுப் பெண்களிடம் வீட்டில் இருந்தவாறு மெழுகுவர்த்தி தயாரித்து வாரம் 5 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையை கூறப்பட்டுள்ளது. இதற்காக கடனுதவி பெற்றுத் தர தலா 19 ஆயிரத்து 300 ரூபாய் 72 பேர் இடம் பெறப் பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories