நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர்.
விருதுநகர் அருகே பட்டம்புதூரில் நடைபெறும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பல்வேறு துறைகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கினை முதல்வர் பார்வையிட்டார்,.வருவாய்த்துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை, மருத்துவம் மற்றும் குடும்பநலத்துறை, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை உள்ளிட்ட 8 துறைகளை சேர்ந்த ரூ.101 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். ரூ.417 கோடியில் 57, 556 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்களை வழங்குகிறார். 40,148 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை (கலைஞரின் கனவு இல்லம்), ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை (வாழ்ந்து காட்டுவோம்), மாவட்ட தொழில் மையம், வேளாண் பொறியியல் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட 10 துறைகளில் 17,408 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Tags : நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர்.