குற்றாலத்திற்கு வந்த ஆந்திரவை சேர்ந்தவர் நீரில் மூழ்கி பலி.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் பகுதியிலிருந்து பேருந்தில் பத்துக்கும் மேற்பட்டோர் தமிழகத்திற்கு சுற்றுலா வந்த நிலையில் நேற்று இரவு குற்றாலத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் குற்றாலம் சித்திர சபை பகுதியில் பேருந்தை நிறுத்திவிட்டு சுற்றுலா பயணிகள் அனைவரும் இரவு ஓய்வெடுத்துள்ளனர் இந்நிலையில் பேருந்தில் கிளீனர் பாஸ்தா வீரன்(27) என்ற இளைஞர் சித்திர சபை தெப்பக்குளம் சுற்றுச்சுவர் மீது ஏறி படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து காலை அவர் காணாமல் போனதை தொடர்ந்து அவருடன் வந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர் அதன்பேரில் காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் அவரது உடைமைகள் மற்றும் காலணி அதே இடத்தில் இருந்ததால் அவர் தெப்பக்குளத்தில் தவறி விழுந்திருக்கலாம் என தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பெயரில் வந்த தீயணைப்புத் துறையினர் தெப்பக்குளத்தில் இறங்கி பார்த்தபோது பாஸ்தா வீரன் உடல் நீரில் மூழ்கி இருப்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து உடலை மீட்ட தீயணைப்புத் துறையினர் காவல்துறை உதவியோடு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சுற்றுலா வந்த இடத்தில் தூக்கத்தில் இளைஞர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags : குற்றாலத்திற்கு வந்த ஆந்திரவை சேர்ந்தவர் நீரில் மூழ்கி பலி.