குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம்.

by Editor / 10-11-2024 11:42:50am
குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம்.

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்தகனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது இதன் தொடர்ச்சியாக குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி,புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது வார விடுமுறை தினம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை காலை குற்றாலம் மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீரில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் குற்றாலம் பகுதி வியபாரிகள் உள்ளிட்டோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Tags : குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம்.

Share via

More stories

Logo