வயிற்றிலேயே இறந்த சிசுவை அகற்றாமல் மருத்துவர்கள் அலட்சியம்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை வயிற்றிலேயே இறந்துள்ளது. சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த ரகுபதி என்பவரின் மனைவி கோகுலப்பிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது குழந்தை இறந்தது தெரியவந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்து குழந்தையை அகற்றாமல் மருத்துவர்கள் அலட்சியம் காட்டியுள்ளனர். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
Tags :