இன்று வீட்டு வாசலில் எம தீபம் ஏற்றி வழிபாடு.

by Editor / 29-10-2024 09:45:16am
இன்று வீட்டு வாசலில் எம தீபம் ஏற்றி  வழிபாடு.

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக இன்று (அக்.29) வடமாநிலங்களில் மக்கள் தங்கள் வீடுகளில் எம தீபம் ஏற்றி வழிபடுவார்கள். வீட்டு வாசலில் எம தீபம் ஏற்றி வழிபட்டால் பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக நம்பப்படுகிறது. குறிப்பாக வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டுமென்றால் இந்நாளில் எமதர்மராஜாவின் மனதை குளிர்விக்கும் வகையில் இந்த வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. மேலும், அகால மரணம் ஏற்படாமல் தடுத்து மோட்சம் பெறும் வகையிலும் இந்த நாளில் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

தீபாவளிக்கு முன்பாக எம தீபம் ஏற்றி முன்னோர்களை வழிபாடு செய்வது என்பது நம்முடைய இந்து சாஸ்திரத்தில் மிக மிக முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடத்தின் எம தீபம் ஏற்ற வேண்டிய நாள் என்ன. எந்த நேரத்தில் எம தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் முன்னோர்களின் ஆத்மா பரிபூரணமாக சாந்தி அடையும்.

இது ஐப்பசி மாதம். கடந்த மாதம் புரட்டாசி மாத அமாவாசை மகாலய பட்சம் நடந்தது, மகாலய பட்சத்தின் 15 நாட்களிலும் முன்னோர்கள் பூமியில் இருப்பதாக நம்முடைய சாஸ்திரங்கள் சொல்லி வைக்கப்பட்டுள்ளது. புரட்டாசி மாத மகாலய பட்சத்திற்கு பூமிக்கு வந்த நம்முடைய முன்னோர்கள், ஐப்பசி மாதம் அமாவாசை திதிக்கு மீண்டும் எமலோகம் திரும்புவதாக நம்பிக்கை. இதன் அடிப்படையில் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முன் வரக்கூடிய திரியோதசி திதியில் நாம், நம்முடைய முன்னோர்களை நினைத்து எம தீபம் ஏற்றினால், நம்முடைய முன்னோர்கள், எம லோகத்தில் சொர்க்கத்திற்கு சென்று நம்மை வாழ்த்துவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.


இந்த வருட ஐப்பசி மாத திரியோதசி திதி என்று வருகிறது. 29.10.2024 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது. ஆகவே நீங்கள் செவ்வாய்க்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் இந்த தீபத்தை உங்களுடைய வீட்டில் ஏற்ற வேண்டும். எப்படி ஏற்ற வேண்டும். நிலைவாசல் படிக்கு வெளியில் இருக்கக்கூடிய இடத்தில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். 5 மண் அகல் விளக்குகள் எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு பெரிய தாம்பூல தட்டில் நேராக அடுக்கி வைத்து, தெற்கு திசை நோக்கியவாறு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். தீபம் தெற்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு உங்களுக்கு முன்னால் வாழ்ந்த ஐந்து தலைமுறையினரையும் மனதார நினைத்து இந்த விளக்கை ஏற்றி, முன்னோர்களை நமஸ்காரம் செய்து கொண்டாலே போதும். உங்களுடைய பித்துருக்கள் எமலோகத்தில், சொர்க்கத்திற்கு செல்வார்கள்.

அந்த பித்துக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பித்ரு சாபம் விலகும், பித்ரு தோஷம் விளங்கும். உங்களுடைய குடும்பத்தில் தடைபட்டு வந்திருந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் எல்லாம் மீண்டும் மீண்டும் துவங்கும். இந்த பூமிக்கு வந்த நம்முடைய பெற்றோர்களை நல்லபடியாக, இந்த திரியோதசி திதியில் மேல் லோகத்திற்கு அனுப்பிவிட்டு அதன் பிறகு வரக்கூடிய தீபாவளி பண்டிகையையும், லட்சுமி பூஜையையும், குபேர பூஜையையும், வீட்டில் நிறைவாக செய்யும் போது அதன் மூலம் நமக்கு பல மடங்கு பலன் கிடைக்கும்.

 

Tags :

Share via