இராஜபாளையம் தொகுதியில் தாமிரபரணி கூட்டுக்குடி நீர் திட்டப்பணியின் துவக்க விழா

இராஜபாளையம் தொகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பாக இராஜபாளையம் நகராட்சி முடிவுற்ற தாமிரபரணி கூட்டுக்குடி நீர் திட்டப்பணியின் துவக்க விழா பம்பிங்க் ஸ்டேசனான சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது, இவ்விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் இராஜபாளையம் தொகுதியில் (26.05.2023) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பாக இராஜபாளையம் நகராட்சி முடிவுற்ற தாமிரபரணி கூட்டுக்குடி நீர் திட்டப்பணியின் துவக்க விழா பம்பிங்க் ஸ்டேசனான சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையம் அருகில் இரவு 8 மணியளவில் நடைபெற்றது, இவ்விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் KKSSR.இராமச்சந்திரன் நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ்மீனா.,IAS அவர்கள் மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி. நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா,தலைமை பொறியாளர் இரகுபதி
தனுஷ் M.குமார்.,MP ,S.தங்கப்பாண்டியன்.,MLA உள்ளிட்டவர்கள்
கலந்து கொண்டு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தனர்,
அதனைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன்.,IAS அவர்கள் தலைமையில் இராஜபாளையம் நகராட்சியில் முடிவுற்ற பாதாள சாக்கடைத்திட்ட தொடக்க விழா மற்றும் இராஜபாளையம் ஒன்றிய கிராமப்பகுதிகளுக்கு ஜல்ஜுவன் திட்டத்தின்கீழ் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டு விழாவிலும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நகராட்சி சேர்மன் பவித்ராஷியாம், மாவட்ட துணை செயலாளர் ராசாஅருண்மொழி , நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா மற்றும் அந்தந்த துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags :