தமிழ்நாடு முழுவதும் உள்ள 922 கிளை கூட்டுறவு வங்கிகளிலும் UPI வசதி.

by Editor / 27-05-2023 01:11:54pm
தமிழ்நாடு முழுவதும் உள்ள  922 கிளை கூட்டுறவு வங்கிகளிலும் UPI வசதி.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் 922 கிளைகளிலும் தற்போது UPI வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மிகுந்த பயனடைவார்கள் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார். UPI வசதி மூலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் பிற தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு இணையான சேவைகளை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது படிப்படியாக மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளிலும் விரிவு படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்யலாம்.

 

Tags :

Share via