மதுரை - பாப்பாபட்டி இடையே இயக்கப்பட்ட 3 பேருந்துகளில் பெண்களுக்கு அனுமதி இலவசம்

by Editor / 04-10-2021 09:39:17am
மதுரை - பாப்பாபட்டி இடையே இயக்கப்பட்ட 3 பேருந்துகளில் பெண்களுக்கு அனுமதி இலவசம்

பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் முதல்வரிடம் பெண்கள் வைத்த கோரிக்கையை ஏற்று நேற்று முதல் மதுரை- பாப்பாபட்டி விரைவு பேருந்துகள் சாதாரண கட்டண பேருந்துகளாக மாற்றப்பட்டு பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

மதுரை மாவட்டம் பாப்பாபட்டி யில் காந்தி ஜெயந்தியன்று நடந்த கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் சில பெண்கள் பேசும்போது, பாப்பாபட்டி- மதுரை இடையே இயக்கப்படும் அரசு நகர் பேருந்துகளில் பெண்களிடம் கட்டணம் வாங்குவதாகவும், கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து, நாளை (இன்று) முதல் பாப்பாபட்டி- மதுரைக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் வசூலிக்க மாட்டர்கள் என அங்கேயே அறிவித்தார்.

முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து மதுரையிலிருந்து பாப்பாபட்டிக்கு இயக்கப்படும் நகர் பேருந்துகளில் நேற்று முதல் பெண்களிடம் கட்டணம் பெறவில்லை.

இது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து பாப்பா பட்டிக்கு 2 விரைவு பேருந்துகள், ஒரு சாதாரண கட்டண பேருந்து இயக்கப்பட்டு வந்தது. முதல் வரின் அறிவிப்பை அடுத்து பாப்பாபட்டிக்கு இயக்கப்பட்ட இரு விரைவு பேருந்துகள் சாதாரண பேருந்துகளாக மாற்றப்பட்டு பெண்கள் இலவசமாக பய ணம் செய்ய நேற்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தனர்.

 

Tags :

Share via