விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவிகள் திரண்ட சுற்றுலா பயணிகள் கூட்டம்.

by Editor / 29-09-2024 10:40:08am
விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவிகள் திரண்ட சுற்றுலா பயணிகள் கூட்டம்.

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலம் பகுதிகளில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலமாகும் இந்த காலங்களில் குற்றால அருவிகளின் நீராடுவதற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 80 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகின்றது. இந்த ஆண்டு குற்றால சீசன் நிறைவடைந்த நிலையிலும் ஐந்தருவி பழைய குற்றாலம் அருவி சிற்றருவி புலி அருவி மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படுகின்றது கடந்த ஒரு வார காலமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழையின் தாக்கம் இல்லாததின் காரணமாக அருவிகளில் நீர்வரத்து குறைந்தது இருப்பினும் தற்பொழுது பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை காலம் என்பதாலும் இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளின் நீராடுவதற்கு திரண்டு வந்த வண்ணம் உள்ளனர் இதன் காரணமாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.

 

Tags : விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவிகள் திரண்ட சுற்றுலா பயணிகள் கூட்டம்.

Share via