1 முதல் 8 ம் வகுப்புகளுக்கு 1–ந் தேதி முதல் பள்ளிகள் திறப்பு அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி:

by Editor / 25-10-2021 04:09:14pm
1 முதல் 8 ம் வகுப்புகளுக்கு 1–ந் தேதி முதல் பள்ளிகள் திறப்பு  அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி:


நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு கண்டிப்பாக பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும் தடுப்பூசி செலுத்தும் பணியினை விரிவுபடுத்தவும், ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின், நவம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்ததுடன் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார்.


அதேவேளை நவம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகள் சுழற்சிமுறையில் நடத்த அனுமதி அளித்துள்ளார். இதனால் பள்ளிகள் திறப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ், நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு கண்டிப்பாக பள்ளிகள் திறக்கப்படும். கொரோனா 3 ஆம் அலை குறித்து உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு ஏதும் வெளியிடாததால் பள்ளிகள் திறக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. இல்லம் தேடி கல்வி' திட்டத்தில் இதுவரை 50 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ள நிலையில் 1.5 லட்சம் பேர் பதிவு செய்வர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது என்றார்.

 

Tags :

Share via