7.5 சதவீத இட ஒதுக்கீடு தனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. 

by Admin / 18-02-2026 01:01:28pm
7.5 சதவீத இட ஒதுக்கீடு தனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. 

 சட்டமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 7.5 சதவீத இட ஒதுக்கீடு தனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது.  இது முழுக்க முழுக்க தனது சிந்தனையில் உதித்த திட்டம் என்றும் தெரிவித்தார். திமுக அரசு இப்போது இதற்கு வீணாக சொந்தம் கொண்டாடி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த திட்டத்திற்கு அன்றைய ஆளுநர் ஒப்புதல் அளிக்க தாமதப்படுத்திய போது அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு .க .ஸ்டாலின் ஆளுநர் போராட்டம் நடத்தினார். அந்த அழுத்தத்தின் காரணமாகவே சட்டம் நிறைவேறியது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர் சுப்ரமணியம் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் 2020செப்டம்பர் 15 ஆம் தேதி மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மசோதாவிற்கு அக்டோபர் 30 2020 அன்று ஒப்புதல் வழங்கினார். இதன் பின்னர் திமுக ஆட்சி அமைந்த உடன் கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் மட்டும் இருந்த 7.5 சதவீதத்தை பொறியியல் ,சட்டம் ,விவசாயம் ,கால்நடை மருத்துவம் போன்ற துறைகளில் பயிலும் மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்தது என்றாா்..

7.5 சதவீத இட ஒதுக்கீடு தனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. 
 

Tags :

Share via
Logo