முதுகுவலியால் அவதி ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆயுர்வேத சிகிச்சை

by Editor / 20-10-2021 05:19:48pm
முதுகுவலியால் அவதி ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆயுர்வேத சிகிச்சை

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நீண்ட நாட்களாகவே முதுகு வலி இருந்து வருகிறது. இதற்கு ஆங்கில மருத்துவ முறை சிகிச்சையில் முழு பலன் கிடைக்காததாலும், ஆங்கில வலி மருந்துகளினால் பக்கவிளைவுகள் ஏற்படக் கூடும் என்ற ஐயத்தினாலும் அவர் ஆயுர்வேத சிகிச்சைக்கு மாறிவிட்டார். ஏற்கனவே கோவையில் இதற்காக பிரத்யேக சிகிச்சை பெற்று ஓரளவு முதுகுவலியிலிருந்து விடுபட்டிருக்கிறார்.

இந்நிலையில் இப்போது அலைச்சல் அதிகரித்த காரணத்தால் மீண்டும் அவருக்கு முதுகு வலி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து கோவை பீளமேட்டில் இயங்கி வரும் பிரபல ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சை பெறத் தொடங்கியிருக்கிறார். கேரள பாரம்பரிய வைத்திய முறைப்படி அங்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. குறைந்தது இன்னும் ஒரு வாரத்திற்காவது ஓ.பி.எஸ். கோவையில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது

 

Tags :

Share via

More stories