விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுப்பு: இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

by Editor / 31-08-2021 04:57:04pm
விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுப்பு: இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

 கேரளாவில் ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகைகளுக்காக  கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த மாநிலத்தில் தினசரி பாதிப்பு வேகமாக உயர்ந்து 30 ஆயிரத்தை கடந்தது. இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் செப்டம்பர் 15ம் தேதிவரை சமய நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

அதன்படி, விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடவும்  சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கடற்கரையில் கரைக்கவும் தடை விதித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே விழாவை கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கும், ஊர்வலமாக செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு தமிழகத்தில் பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அதன்படி கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி தலைமையில் உச்சி பிள்ளையார் கோவில் முன்பு 108 தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குருமூர்த்தி கூறுகையில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கும் ஊர்வலம் நடத்துவதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையென்றால் தடையை மீறி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் என கூறினார்.
 

 

Tags :

Share via