பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் ரூ.10லிருந்து ரூ.20 ஆக உயர்வு

by Editor / 30-09-2022 11:35:31am
பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் ரூ.10லிருந்து ரூ.20 ஆக உயர்வு

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 8 முக்கிய ரெயில் நிலையங்களிலும் அக்டோபர் 1ம் தேதி முதல் 2023ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை ஒரு தனி நபருக்கான பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் ரூ.10லிருந்து ரூ.20 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் தொடர்ச்சியாக வருகை தரவுள்ளன. இந்த பண்டிகைக் காலங்களில் ரெயில் நிலையங்களில் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையம், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரெயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories