தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்

by Editor / 18-08-2022 02:04:59pm
தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்

பேருந்துகளில் பெண் பயணிகளை முறைத்துப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை நடத்துநர்கள் இறக்கி விடலாம் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பேருந்துகளில் நாள்தோறும் லட்சக்கணக்கான பெண்கள் பயணித்து வருகின்றனர். 

இந்த பயணத்தின்போது, சக ஆண் பயணிகளால் பெண்களுக்கு பல்வேறு வகையில் இடையூறுகள் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில், பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக திருத்தம் செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களை நோக்கி முறைத்து பார்த்தல்,  கூச்சலிடுதல், பாலியல் ரீதியாக சைகை காட்டுதல், புகைப்படம் எடுத்தல் போன்றவை செய்யும் ஆண்களை நடத்துநர்கள் இறக்கி விடலாம்.

நடத்துநர்களின் எச்சரிக்கையை மீறி செயல்படும் ஆண்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் எனத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

Tags :

Share via