கஞ்சா விற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் கைது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோயில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக உசிலம்பட்டி அருகிலுள்ள செல்லம்பட்டியை சேர்ந்த விருமாயி(60) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் மதுரை டி. ஐ. ஜி. யின் சிறப்பு அதிரடி படை சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் தலைமையிலான போலீஸ் குழுவினர் தலைமறைவாக இருந்த விருமாயியை கைது செய்து மேலவளவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Tags :