போலி ஆவணம் தயாரித்து காரை விற்ற பெண் கைது

by Staff / 09-11-2023 04:43:17pm
போலி ஆவணம் தயாரித்து காரை விற்ற பெண் கைது

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் அடுத்து புழல், மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் கீர்த்தனா நாகலட்சுமி (வயது 28). இவரது சகோதரி கீர்த்திகா, 25. ஈஞ்சம்பாக்கத்தில் வசித்த இவர்களது பெற்றோர், சில ஆண்டுகளுக்கு முன் இறந்தனர்.இவர்கள் பயன்படுத்திய காரை, இவர்களுக்கு பழக்கமான பத்மா, 45, என்பவர், தன் உறவினர்களுடன் சேர்ந்து, போலி ஆவணம் தயாரித்து விற்றுள்ளார்.மேலும், ஈஞ்சம்பாக்கத்திலுள்ள கீர்த்தனா நாகலட்சுமி, கீர்த்திகா ஆகியோரின் குடும்ப சொத்துகளை அபகரிக்க திட்டமிட்டுள்ளனர். இதை தட்டிக் கேட்ட இருவரையும், பத்மா தரப்பினர் மிரட்டியுள்ளனர்.இதுகுறித்த புகாரை விசாரித்த நீலாங்கரை போலீசார், பத்மாவை நேற்று கைது செய்தனர். இவரது உறவினர்கள் இருவரை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via