"புதுச்சேரியில் இனி தமிழ்நாடு கல்வித் திட்டம் இல்லை"

by Staff / 12-08-2024 11:58:16am

புதுச்சேரியில் இனி தமிழ்நாடு கல்வித் திட்டம் இல்லை என சட்டப்பேரவையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளிலும் சிபிஎஸ்சி பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக அந்த பாடத்திட்டத்தில் பயில விரும்பாத மாணவர்களுக்கு தமிழ்நாடு பாடத் திட்டத்தின் கீழ் கல்வி பயில ஏற்பாடு செய்ய வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் அமைச்சர் நமச்சிவாயம் இவ்வாறு கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories