பாரிசில்  நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகள் இன்று நிறைவு

by Admin / 12-08-2024 10:53:25am
பாரிசில்  நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகள் இன்று நிறைவு

பாரிசில்  நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகள் இன்று நிறைவு பெற உள்ளன. ஒலிம்பிக் போட்டி 2024 ஒரு வித்தியாசமான முறையில் பாரிஸ் சென் நதியில் பல்வேறு படங்களில் நடந்தது ஆட்டம் பாட்டம் இசை என்கிற நிகழ்வோடு தொடங்கப்பட்ட இந்த ஒலிம்பிக் போட்டி இன்று நிறைவுற உள்ளது.71  நாட்டு வீரர்களின் பங்கேற்ற போட்டிகளில் சீனா அதிக40 தங்க பதக்கங்களை வென்று 2 இடத்தில்  உள்ளது. பதக்கப் பட்டியலில் அமெரிக்கா அதிக பதக்கங்களை குவித்து முதல் இடத்தில் 40 தங்கப்பதக்கங்களை  பெற்று சீனாவுடன் சமநிலையில் உள்ளது .இன்று நடக்கும் இந்த இறுதி போட்டியில் ,மீதமுள்ள  போட்டிகளில் அமெரிக்க வீரர்கள் கடுமையாக முயன்றுபதக்க பட்டியலில் அமெரிக்காவை முதல் இடத்தில்  இருப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவர். இன்று நிறைவுறும் ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நடைபெற உள்ளது.. நாள் போட்டி நிறைவுற்ற பின்பு ஒலிம்பிக் கொடி இறக்கப்பட்டு அந்தக் கொடியை அமெரிக்க பிரதிநிதியிடம் வழங்குவதோடு ஒலிம்பிக் தீபத்தையும் அணைப்பர். இது ஒலிம்பிக் விதிமுறைகளில் படி நடக்கும் நிகழ்வாகும். இப் போட்டிகளில் இந்திய வீரர்கள் தங்கப்பதக்கம் பெறவில்லை என்பதோடு அதிகமான பதக்கங்களையும் பெறவில்லை என்பது ஒரு ஏமாற்றமான ஒரு நிகழ்வாகவே இது பார்க்கப்படுகிறது ஒரே ஒரு வெள்ளி பதக்கத்தோடு ஒரு 5 வெண்கல பதக்கங்களோடும் இந்திய வீரர்கள் திரும்ப உள்ளனர். கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் இந்த முறை அதை தவறவிட்டது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. காத்திருப்போம், அடுத்த ஆண்டு அமெரிக்காவில், நம் வீரர்கள் தங்கப் பதக்கத்தோடு அதிக பதக்கங்களையும் வெல்வார்கள் என்கிற நம்பிக்கையோடு..

பாரிசில்  நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகள் இன்று நிறைவு
 

Tags :

Share via