ஐபிஎல் 2026 -தொடருக்கான முதற்கட்ட அட்டவணையை பி.சி.சி.ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழா கொண்டாட்டமான ஐபிஎல் 2026 தொடருக்கான முதற்கட்ட அட்டவணையை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த முதற்கட்ட போட்டிகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. முதல் போட்டி மார்ச் 28 அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது .நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன . மொத்தம் 20 போட்டிகள் 10 வெவ்வேறு மைதானங்களில் நடத்தப்படுகின்றன. தமிழகம் மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலங்களின் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல்களின் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகும் எனப் பி..சி.சி.ஐ தெரிவித்துள்ளது. மார்ச் 28 அன்று பெங்களூரில் இரவு ஏழு முப்பது மணிக்கு ஆர்சிபி அணியும் எஸ் ஆர் எச் அணியும் மோதுகின்றன. 29ஆம் தேதி மும்பை மைதானத்தில் இரவு ஏழு முப்பது மணிக்கு மும்பை அணியும் கே கே ஆர் அணியும் மோதுகின்றன. மார்ச் 30ஆம் தேதி கௌகாத்தியில் ஆர்ஆர் அணியும் சிஎஸ்கே அணியும் இரவு ஏழு முப்பது மணிக்கு மோதுகின்றன. ஏப்ரல் 3ஆம் தேதி சி எஸ் கே அணியும் பஞ்சாப் அணியும் சென்னையில் இரவு 7:30 மணிக்கு மோதுகின்றன .ஏப்ரல் 5ஆம் தேதி பெங்களூர் அணியும் சென்னை அணியும் பெங்களூரில் இரவு ஏழு முப்பது மணிக்கு மோதுகின்றன .ஏப்ரல் பதினோராம் தேதி சென்னை அணியும் டெல்லி அணியும் சென்னை மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு மோதுகின்றன, ஏப்ரல் 12ஆம் தேதி மும்பை அணியும் பெங்களூர் அணியும் மும்பை மைதானத்தில் இரவு ஏழு முப்பது மணிக்கு மோதுகின்றன.
Tags :


















