வேங்கைவயல் குடிநீர் தொட்டி விவகாரம் - காவலருக்கு காவல்துறை நோட்டீஸ் ஒட்டியது.

புதுக்கோட்டை வேங்கைவயலில் உள்ள குடிநீர் தொட்டியில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் வேங்கைவயல் விவகாரத்தில் நீதிமன்றத்தில் அண்மையில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்..அதில், வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த காவலர்கள் முரளி ராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டத பஞ்சாயத்து தலைவரின் கணவரைப் பழிவாங்கும் பொருட்டு, வதந்தியைப் பரப்பிவிட்டு பின்னர் குடிநீரில் மனித கழிவு கலந்ததாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட காவலர் முரளி ராஜா வீட்டில் காவல்துறையினர் நோட்டீஸ் ஒட்டினர்.
Tags : குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் காவலர் முரளி ராஜா காவல்துறை நோட்டீஸ் ஒட்டியது.